ஸ்காட்லாந்து - வடக்கு அயர்லாந்தை இணைக்கும் 25 மைல் கடல் சுரங்கப் பாதைக்கு இம்மாதம் ஒப்புதல்!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

'போரிஸ் பர்ரோ' என அழைக்கப்படும் வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தை இணைக்கும் 25 மைல் சுரங்கப்பாதை திட்டத்துக்கு இம்மாதம் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு அயர்லாந்தின் Larne-விலிருந்து ஸ்காட்லாந்து மற்றும் Stranraer-ஐ இணைக்கும் 25 மைல் சுரங்கப்பாதைக்கான திட்டங்கள் சில வாரங்களுக்குள் அங்கீகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேட் பிரிட்டனுக்கும் வடக்கு அயர்லாந்திற்கும் இடையிலான இந்த கடல் சுரங்கப்பாதைத் திட்டம், பிரெக்ஸிட்-க்கு பிந்தைய வர்த்தக பதட்டங்களைத் தணிக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது.

25 மைல் சுரங்கப்பாதை சாத்தியமா என்பதை அறிய நெட்வொர்க் ரெயிலின் தலைவர் பீட்டர் ஹெண்டி தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

தனது கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்க அவர் ஏற்கெனவே பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அவரது அறிக்கை சில வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதை பிரித்தானியாவையும் பிரான்சையும் இணைக்கும் Channel சுரங்கப் பாதையைப் போல் வடிவமைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இதில் ரயில்கள், கார்கள் மற்றும் HGVS ஆகிய வாகனங்கள் செல்ல இடமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட்லாந்துக்கும் வடக்கு அயர்லாந்திற்கும் இடையிலான இணைப்பு திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்முதலில் 2018-ல் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்