புதிதாக பிறந்த குழந்தை, கர்ப்பிணி பெண்கள் மீது தடுப்பூசி சோதனை! அஸ்ட்ராஜெனேகா அறிவிப்பு

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

குழந்தைகள் மீது தடுப்பூசி செலுத்தும் சோதனைத் திட்டத்தை விரிவுபடுத்தி, புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மீதும் சோதனை செய்யவுள்ளதாக அஸ்ட்ராஜெனேகா அறிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மற்ற தடுப்பூசிகளை விட மலிவானது மற்றும் விநியோகிக்க எளிதானது என கூறப்படுகிறது.

அஸ்ட்ராஜெனேகாவின் கொரோனா தடுப்பூசியை பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, அர்ஜென்டினா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடோர், மெக்சிகோ, மொராக்கோ உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரித்துள்ளன.

தடுப்பூசி நல்ல பலனை அளித்த்துவரும் நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அடுத்தகட்டமாக 6 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்தவுள்ளதாக நேற்று அறிவித்தது.

இந்நிலையில், இன்று அஸ்ட்ராஜெனேகா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அதன் அடுத்தக்கட்ட தடுப்பூசி சோதனையை விரிவுபடுத்தவுள்ளதாகவும், அதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மீதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு, லண்டன், சவுத்தாம்ப்டன் மற்றும் பிரிஸ்டல் ஆகிய இடங்களில் ஆறு முதல் 17 வயதுடைய 300 தன்னார்வலர்கள் மீது இந்த மாதம் ஒரு சோதனை தொடங்கும் என்று அஸ்ட்ராஜெனேகா தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மீதும் முதல் டோஸ் செலுத்தப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்