பிரித்தானியாவில் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி! என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் சீக்கியர்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், கேடிவி என்று சுருக்கமாக அழைக்கப்படும், கல்சா டெலிவிஷன் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு, பகா அண்டு ஷெரா என்ற இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

இந்த நிகழ்ச்சி பிரித்தானியாவில் வாழும் சீக்கியர்களிடம் மறைமுகமாக வன்முறையை துாண்டும் விதத்தில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் இந்திராவின் படத்துடன் இந்தியாவுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

அதுமட்டுமின்றி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பன்தக் மஸ்லி என்ற விவாத நிகழ்ச்சியும் பயங்கரவாத அமைப்பான பப்பர் கல்சாவையும் வன்முறையையும் ஆதரிப்பது போன்று இருந்ததாக ஆப்காம் எனப்படும் தொலைகாட்சி ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அமைப்பிற்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, வன்முறையை துாண்டி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய கேடிவிக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்