பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய தடை நீட்டிப்பு! பிரபல நாடு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட விமான தடையை மேலும் நீட்டிள்ளதுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மார்ச் 16 வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் கொரோனா வைரஸ் பணிக்குழு அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு காரணமாக பிரித்தானியாவிலிருந்து ரஷ்யா வரும் விமானங்களுக்கும் மற்றும் ரஷ்யாவிலிருந்து பிரித்தானியா புறப்படும் விமானங்களுக்கும் ரஷ்யா தடை விதித்தது.

புதிய வகை உருமாறிய கொரோனாவால் ஒருவார் பாதித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ள ரஷ்யா, டிசம்பர் 22 முதல் பிரித்தானியாவுக்கான விமானத் தடையை அமல்படுத்தியது நினைவுக் கூரத்தக்கது.

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து, அந்த நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல உலக நாடுகள் பிரித்தானியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்தன.

எனினும், அதில் பல நாடுகள் பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்