இன்னும் சில வாரங்கள்தான்... பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட இருக்கும் முக்கிய அறிவிப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

இன்னும் சில வாரங்களில் குடும்பங்களும் நண்பர்களும் சந்தித்துக்கொள்ளும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட இருக்கிறார்.

அதாவது, ஈஸ்டர் பண்டிகை நேரத்தில், மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, தாத்தா பாட்டிகள், தங்கள் பேரக்குழந்தைகளை அணைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது எனலாம்.

தற்போது நாட்டில் கொரோனா நிலைமை எப்படி உள்ளது என்பது குறித்த தரவுகளை அமைச்சர்கள் கவனித்துவரும் நிலையில், எத்தனை பேர் வெளியிடங்களில் சந்தித்துக்கொள்ளலாம் என்பது குறித்த விதிகள் நெகிழ்த்தப்படும் என அமைச்சர்கள் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன் பொருள் என்னவென்றால், ஈஸ்டர் பண்டிகையின்போது, குடும்பத்தினரும் நண்பர்களும் சந்தித்துக்கொள்ள அனுமதியளிக்கப்படலாம் என்பதாகும். இது குறித்த தகவலை பிரதமர் திங்கட்கிழமை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு பேர் மட்டுமே சந்தித்துக்கொள்ள முடியும் என்று இருந்த விதி மாறி, ஏப்ரல் மாதம் முதல், இரண்டு முழுக்குடும்பங்களும் வெளியிடங்களில் சந்தித்துக்கொள்ளலாம், குடும்பங்களில் எத்தனை பேர் இருந்தாலும் பரவாயில்லை.

என்றாலும், வெகு தூரத்தில், வெவ்வேறு இடங்களில் வசிக்கும் உறவினர்கள் சந்தித்துக்கொள்ளவேண்டுமானால், அதற்கு அவர்கள் இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருக்கவேண்டும், காரணம், நீண்ட தூர பயணங்கள் குறித்த விதிமுறைகள் எப்போது மாறும் என்பது தெரியவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்