கவுரவ பட்டங்களை இழக்கிறார் ஹாரி! ராணியிடம் திரும்பி ஒப்படைக்கும் படி உத்தரவு

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

பிரித்தானிய இளவரசர் ஹாரி மீண்டும் அரச குடும்பத்தில் இணைவதில்லை என முடிவு எடுத்துள்ள நிலையில், இராணுவத்தில் அவருக்கு வழங்கப்பட்ட கவுரவ பட்டங்களை இழக்க உள்ளார்.

பிரித்தானிய இளவரச ஹாரி கடந்த 2018-ஆம் ஆண்டு, நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்கள் கடந்த ஓராண்டிற்கு முன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி, சாதரண பிரஜையாக வாழ விரும்புவதாக அறிவித்தனர்.

இதையடுத்து இவர்கள், தற்போது அமெரிக்காவில், சாதாரண மக்களில் ஒருவர்களாக வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு துவக்கத்தில், தன் பாட்டி, இரண்டாம் எலிசபெத் ராணியின் வற்புறுத்தலின்படி, அரச குடும்பத்தில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்வதாக, ஹாரி தெரிவித்திருந்தார்.

தற்போது தங்கள் முடிவில் மாற்றமில்லை என, ஹாரி தம்பதி உறுதியாக தெரிவித்து விட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், முன்னாள் இராணுவ வீரர் என்ற வகையில், ஹாரிக்கு வழங்கப்பட்ட ஏராளமான கவுரவ பட்டங்கள், காமன்வெல்த் விருதுகள், புரவலர் அந்தஸ்து ஆகியவற்றை, ராணியிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அதுபோல, இளவரசி என்ற முறையில், மேகன் பெற்ற கவுரவ பட்டங்கள் அனைத்தையும் திரும்பத் தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்