பிரித்தானியாவில் 5 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய 14 வயது சிறுவன் கைது! அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் 3 வாரங்களில் ஐந்து பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பிரித்தானியாவின் லீட்ஸில் கடந்த 3 வாரங்களில் 19ல் இருந்து 55 வயதான 5 பெண்களுக்கு தனித்தனிதாக சிறுவன் ஒருவன் தொந்தரவு கொடுத்தான் என புகார் வந்தது.

அதன்படி 55 வயதான பெண் அங்குள்ள பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரருகில் வந்த சிறுவன் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டான்.

அதே போல சாலையில் சென்ற 29 வயது இளம்பெண்ணை பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தும் வகையில் திடீரென தவறாக தொட்டு மோசமாக நடந்திருக்கிறான்.

இப்படி 5 பெண்கள் மூன்று வாரத்தில் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்த விசாரணையில் ஐந்து சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே சிறுவன் தான் என்பது உறுதியானது.

இந்த நிலையில் குற்றவாளியான 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான் என பொலிசார் கூறியுள்ளனர்.

அவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுவனால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தங்களிடம் புகார் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்