பிரித்தானியாவில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்பு! கசிந்தது அரசின் அதிரடி திட்டம்

Report Print Basu in பிரித்தானியா
0Shares

பிரித்தானியா நிதி அமைச்சர் ரிஷி சுனக், அடுத்த மாதம் பட்ஜெட்-ல் கொரோனா ஆதரவுத் திட்டங்களை நீட்டிக்க நிதி வழங்குவதற்காக வணிகத்திற்கான வரியை அதிகரிக்க உள்ளதாக Sunday Times தெரிவித்துள்ளது

மார்ச் 3ம் திகதி சுனக் தனது பட்ஜெட் உரையில், கார்ப்பரேஷன் வரியை பவுண்டில் 19 பென்ஸிலிருந்து அதிகரிப்பதாக அறிவிப்பார், மேலும் அடுத்த பொதுத் தேர்தலின் போது அது பவுண்டில் 23 பென்ஸாக உயர்த்தும் திட்டத்தை சுட்டிக் காட்டுவார் என்று Sunday Times அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஆண்டுக்கு 12 பில்லியன் பவுண்டுகள் திரட்டப்படும் என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

அறிக்கையின்படி, இந்த இலையுதிர்காலத்தில் இருந்து வணிகத்திற்கான மசோதாவில் குறைந்தபட்சம் 1 பென்ஸ் அதிகரிக்கப்படவுள்ளது, அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் உயரும்.

கார்ப்பரேஷன் வரியை 23%-ஐ விட அதிகமாக உயர்த்த மாட்டேன் என்று சுனக்கின் நெருங்கிய வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

குறைந்தது ஆகஸ்ட் மாதம் வரை furlough திட்டம், வாட் வரிச்சலுகை மற்றும் வணிக ஆதரவு கடன்களுக்கு நிதி அளிப்பதற்கு இந்த நடவடிக்கைகள் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

கார்ப்பரேஷன் வரி உயர்வு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும், மேலும் கொரோனா ஆதரவு திட்டங்களை நீட்டிப்பது பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதை விட நீண்டதாக இருக்கும் என்று Sunday Times மேற்கோளிட்டுள்ளது.

பிரித்தானியாவின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் 300 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு மிகப் பெரிய சரிவை சந்தித்தது, அது 10% ஆக சரிந்தது, மேலும் 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 4% சரியும் என்று இங்கிலாந்து வங்கி கணித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்