காருடன் சேர்த்து 2 குழந்தைகளைக் கடத்திச் சென்ற சிறுவர்கள்; 15 நிமிடத்தில் பிடித்த பொலிஸின் அதிரடியான ஆக்ஷன்!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் காருடன் சேர்த்து அதிலிருந்த இரண்டு குழந்தைகளையும் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Birmingham பகுதியில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு West Midlands பொலிஸுக்கு ஒரு போன் கால் வந்தது.

அதில் பதற்றத்துடன் பேசிய ஒரு நபர், வரும் வழியில் ஓரமாக நிறுத்திவைத்திருந்த தனது காரை இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் செல்வதாகவும், அந்த காருக்குள் தனது 2 மற்றும் 4 வயது ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸ் உடனடியாக ஹெலிக்காப்டரின் மூலம் சென்று, A38 Bristol சாலையில் Wrong way-ல் தாறுமாறாக சென்றுகொண்டிருந்த அந்தக் காரை நிறுத்தியுள்ளனர்.

காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து 15 வயதான இரண்டு சிறுவர்களும் தப்பி ஓடிவிட்டனர். பொலிஸ் நெருங்கி பார்த்தபோது காருக்குள் இருந்த உரிமையாளரின் குழந்தைகள் பத்திரமாக இருந்தனர்.

கடத்தப்பட்ட 15 நிமிடங்களில் காரை மீட்டு குழந்தைகளையும் அவர்களது தந்தையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். மோட்டார் வாகன திருட்டு மற்றும் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், West Midlands பொலிஸின் துரிதமான நடவடிக்கைக்கு பாராட்டுக்களைப் பெற்று வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்