உலகிலேயே கொரோனா பரவல் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக லண்டனில் இந்த பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
லண்டனில் யூத ஆர்த்தடாக்ஸ் சமூகம் பெருந்திரளாக வசிக்கும் Stamford Hill பகுதியே கொரோனா பரவல் மிகுந்த பகுதி என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சுமார் 15,000 யூதர்கள் வசிக்கும் இப்பகுதியில் மூவரில் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உலகிலேயே Stamford Hill பகுதியே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி இங்குள்ள உழைக்கும் மக்களில் 75 சதவீதம் பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே இதேபோன்ற உயர் தொற்றுநோய் விகிதத்தைக் காட்டியுள்ளன.
பிரேசிலின் மனாஸ் பகுதியும் அதில் ஒன்று. இதனிடையே, யூதர்களின் முக்கிய திருவிழா ஒன்று நெருங்கி வருவதாகவும்,
குறித்த சமூகம் இனிமேலும் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க தலைவர்கள் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுக்குடும்ப முறை, ஏழ்மை, ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட நிலை உள்ளிட்ட காரணங்களாலையே, இந்த யூத சமூகம் உலக அளவில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.
மேலும், சமூக விலகலை ஏற்பது கூட்டுக்குடும்பமாக வாழும் யூத சமூகத்திற்கு கடினமான ஒன்று என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் சமூக மக்களுடன் பிணைந்து வாழும் அவர்களுக்கு சமூக விலகல் என்பது வாழ்க்கை முறையை பாதிக்கும் ஒன்றாகும் என்றார்.