பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் திரும்புவோர்க்கு... நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த புதிய சட்டம்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் இருந்து 48 மணி நேரத்தில் பிரான்சிற்கு திரும்பினால் கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனா பரிசோதனை முடிவுகள் என்பது பயணத்தின் போது அவசியமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரிசோதனை முடிவுகள் கட்டாயம்.

இந்நிலையில், பிரித்தானியாவில் இருந்து 48 மணிநேரத்தில் பிரான்சுக்கு திரும்பினால் கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி பார ஊர்தி டிரைவர்களுக்கு மட்டும் என வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்குள் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் (PCR) தேவையில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியில் இருந்து இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கனரக வாகன டிரைவர்களுக்கு இந்த PCR பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்