பிரித்தானியாவில் பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும்? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கும் என்பது குறித்து நாட்டின் தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்-ல்' பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்ற உள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த தனது படிபடியான திட்டத்தை வெளியிடவுள்ளார்.

இந்நிலையில், மார்ச் 8 ஆம் திகதி பிரித்தானியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi தகவல் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அரசாங்கத்தின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 29ம் திகதி முதல் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் அல்லது 6 பேர் வெளிப்புறங்களில் சந்திக்க அனுமதி அளிக்கப்படும்.

படிபடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டம் குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டிற்கானது என குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 8 முதல் இரண்டு பேர் வெளிப்புறங்களில் சந்திக்கவும், "ஒன்றாக காபி சாப்பிடவும் முடியும் என்று தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்