பேரனுக்கு ஹேப்பி மீல் வாங்கிக்கொடுத்த தாத்தா, இனி ஒரு மீல் கூட ஹேப்பியா சாப்பிட முடியாதபடி நடந்த வேடிக்கை சம்பவம்!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பேரனுக்கு 2 யூரோ செலவில் பர்கர் வாங்கிக்கொடுத்த தாத்தா, 2000 யூரோ அபராதம் பெற்று, கோர்ட் வரை சென்ற வேடிக்கையான சம்பவம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.

பிரித்தானியாவின் Luton நகரத்தைச் சேர்ந்த John Babbage (75), தனது பேரன் Tyler-ஐ (12) அருகிலுள்ள McDonald's உணவகத்துக்கு அழைத்துச் சென்று, 2 யூரோ மதிப்பிலான ஒரு Happy Meal-ஐ வாங்கி கொடுத்துள்ளார்.

அவர் தனது காரை 2 மணிநேர இலவச பார்க்கிங்கில் விட்டிருந்தார். Tyler தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்க, Babbage தனது காரிலேயே தூங்கிவிட்டார்.

பின்னர் தனது பேரன் வந்ததும், வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் அவர் இலவச பார்க்கிங் நேரத்தைக் கடந்து கூடுதலாக 17 நிமிடங்கள் பார்க் செய்துள்ளார் என்பதை அவர் அறியவில்லை. Tylerக்கும் அதைப் பற்றிய விவரம் தெரியாது.

பல நாட்கள் கழித்து, இப்போது பிரித்தானியாவில் கடனை வசூலிக்கும் DCBL நிறுவனம் Babbage வீட்டிற்கு வந்து, Highview பார்க்கிங்கில் இலவச நேரத்தைக் கடந்து பார்க்கிங் செய்ததற்காகவும், அதற்காக நான்கு முறை வீட்டிற்கு அபராத பில் அனுப்பியும் எந்த பதிலும் கொடுக்காததாலும், இப்போது 1651 யூரோக்களுடன் நான்கு முறை அனுப்பட்ட பில்லின் தொகை 400 யூரோக்களையும் சேர்த்து மொத்தம் 2051 யூரோக்கள் பணம் கட்டவேண்டும் என DCBL அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு பேரதிர்ச்சிக்கு ஆளான Babbage மற்றும் அவரது மனைவி Libby, அப்படி எந்த ரசீதுகழும் வீட்டுக்கு இதுவரை வந்ததில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது 4 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதும், ஒவ்வொரு மாதமும் தவறான வீட்டு முகவரிக்கு ரசீதுகள் அனுப்பப்பட்டுவந்துள்ளது என்பதும் அப்போது தான் தெரியவந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

McDonald's நிறுவனம் Highview Parking-ஐ நடத்துபவரிடம் தனது வாடிக்கையாளரின் மீதான அபராதத்தை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்