இனி இந்த விமானங்கள் எங்கள் வான்வெளியில் நுழைய தடை! பிரித்தானியா முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
0Shares

Pratt & Whitney 4000-112 இன்ஜின்கள் கொண்ட போயிங் 777 விமானங்கள் அதன் வான்வெளியில் நுழைய பிரித்தானியா தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் யுனைடெ்ட ஏர்லைன்ஸிக்கு சொந்தமான Pratt & Whitney 4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 பயணிகள் விமானம், நடுவானில் கோளாறாகி தீப்பற்றி எரிந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது, யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து Pratt & Whitney 4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 விமானங்கள் அதன் வான்வெளியில் நுழைய தடை விதிப்பதாக பிரித்தானியா விமானப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பிரித்தானியா விமான நிறுவனங்களில் இந்த இன்ஜின் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இன்ஜின்கள் அமெரிக்க, ஜப்பான் மற்றும் தென் கொரிய விமான நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதாகவும், இந்த நாடுகளிலும் அதிகாரிகள் அதன் பயன்பாட்டை நிறுத்திவிட்டதாக பிரித்தானியா விமானப் போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்