பிரித்தானியாவில் விபத்தில் மகனை பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண்: கண்ணீர் கோரிக்கையை மீறி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

நெடுஞ்சாலை விபத்தொன்றில் மகனை அநியாயமாக பலி கொடுத்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர், ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு தடைவிதிக்குமாறு பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரித்தானியாவின் ஸ்மார்ட் நெடுஞ்சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றபோது, வேகமாக வந்த ட்ரக் மோதியதில், அந்த காரிலிருந்த தேவ் நரன் (8) என்னும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் தம்பதியரின் மகன் தேவ் நரன் (8). தேவ் தனது தாத்தாவுடன் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அவர்கள் சென்ற கார் பழுதாக, நெடுஞ்சாலையில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு காரை கொண்டு செல்ல அவர் முயற்சிக்கும்போது, வேகமாக வந்த ட்ரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான் தேவ்.

அவர்கள் பயணித்தது ஒரு ஸ்மார்ட் சாலை. அதாவது, அதில் ஒரு வழிச்சாலை, கூட்ட நெரிசலுக்கேற்றாற்போல் பயன்பாட்டுக்கு விடப்படும்.

மற்றபடி, அவசர காலத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு அந்த சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அப்படி நிறுத்தும்போதுதான் தேவ் உயிரிழந்தான். இப்படி ஒரு உயிரிழப்பு நேரிடுவது, அதுவும் பர்மிங்காம் நெடுஞ்சாலையில் இது முதல் முறையல்ல.

ஏற்கனவே அகமது (36) என்பவர், Jason Mercer (44) என்பவர், Derek Jacobs (83) ஆகியோர் இதே போன்ற ஸ்மார்ட் சாலையில் கொல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உருவாக்கியுள்ள Broken Hearts Club என்ற வாட்ஸ் ஆப் குழுவின் உறுப்பினர்கள் இந்த ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு தடைவிதிக்குமாறு பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

அத்துடன், நெடுஞ்சாலைத்துறை செயலரான Grant Shappsம், பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலையில் பழுதாகும் வாகனங்களுக்காக இடம் ஒதுக்குவது தொடர்பாக சில ஆலோசனைகள் அளித்திருந்தார்.

ஆனால், அத்தனை உயிரிழப்புக்குப் பின்னரும், பாதுகாப்புச் செயலரின் ஆலோசனையையும் மீறி நெடுஞ்சாலைத்துறை ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது M6 நெடுஞ்சாலையின் 10 மைல் தொலைவை ஸ்மார்ட் நெடுஞ்சாலையாக மாற்ற அது முடிவு செய்துள்ளது.

அந்த சாலையில் திடீரென பழுதாகி நிற்கும் வாகனங்களை நிறுத்துவதற்கென அமைக்கப்பட்டிருந்த வசதியும் நீக்கப்படுகிறது.

இதனால், அடுத்த 60 ஆண்டுகளில் கூடுதலாக 101 விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ள நிலையிலும், நெடுஞ்சாலைத்துறை அதையும் மீறி ஸ்மார்ட் சாலையை உருவாக்கியே தீருவது என அடம்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்