இது பல ஓட்டைகள் உள்ள சல்லடை! பிரித்தானியாவை கடுமையாக விமர்சித்த முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்

Report Print Basu in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவின் ஹொட்டல் தனிமைப்படுத்தல் விதி கொரோனாவை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்று முன்னணி அவுஸ்திரேலிய தொற்றுநோயியல் நிபுணர் விமர்சித்துள்ளார்.

விக்டோரியாவில் உள்ள Deakin பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Catherine Bennett, பிரித்தானியாவின் ஹொட்டல் தனிமைப்படுத்தல் முறையை சல்லடையுடன் ஒப்பிட்டுள்ளார்.

நோய்த்தொற்று விகிதங்களை குறைவாக வைத்திருப்பதிலும், உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதுகாப்பதிலும் அவுஸ்திரேலியாவின் ‘முக்கிய கருவிகளில்’ எல்லை மூடல் ஒன்றாகும் என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து நாடாளுமன்றக் குழுவிலும் பேசிய Bennett, கூடுதல் சோதனைகளைச் சேர்ப்பது உள்ளிட்ட புதிய மாறுபாடுகளை எதிர்கொள்ளும் விதமாக அவுஸ்திரேலியா தனது ஹொட்டல் தனிமைப்படுத்தப்பட்ட முறையை கடுமையாக்கியுள்ளது என்றார்.

அறிமுகப்படுத்தப்பட்டு 10 நாட்களே ஆன பிரித்தானியாவின் ஹொட்டல் தனிமைப்படுத்தல் அமைப்பு, மக்களை உடற்பயிற்சிக்கு வெளியே செல்ல அனுமதிக்கிறது. இது அவுஸ்திரேலியா, பிரித்தானியா இடையே உள்ள வித்தியாசத்தை காட்டுகிறது.

நீங்கள் சல்லடையில் (ஹொட்டல் தனிமைப்படுத்தல் விதி) பல ஓட்டைகளை வைத்திருக்கப் போகிறீர்கள் என்றால், சல்லடையை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? என பேராசிரியர் Catherine Bennett கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்