இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்த வீடு... ஒரு காதலனின் சந்தேகத்தால் பலியான உயிர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் இரண்டு நாட்களாக வீடு ஒன்று திறக்கப்படாமல் இருக்கவே, பக்கத்துவீட்டுக்காரர் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, மான்செஸ்டரில் அமைந்துள்ள அந்த வீட்டில் வாழ்ந்து வந்த, John Lee Morris (32), மற்றும் அவரது காதலியாகிய Niki Campbell (30) ஆகிய இருவரும் உயிரிழந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.

Nikiயின் உடலில் கத்திக்குத்துக்காயங்களுடன் இறந்து கிடக்க, Morris அருகில் இறந்து கிடந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில், அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டதால் Morris உயிரிழந்தது தெரியவந்தது.

விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு முந்தைய தினம், மதுபான விடுதி ஒன்றில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Nikiக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக Morris சந்தேகப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக ஏற்பட்ட சண்டையின்போது, Nikiயை பல முறை கத்தியால் குத்திக்கொன்றிருக்கிறார் Morris.

சந்தேகத்தால் இரு உயிர்கள் பலியான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்