மருத்துவமனையில் தொடரும் இளவரசர் பிலிப்... அவருக்கு என்ன நோய்? அரண்மனையில் கசிந்த தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares

பிரித்தானிய இளவரசர் பிலிப் மருத்துவமனையில் தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னும் பல நாட்களுக்கு அவர் சிகிச்சையில் தொடர்வார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு இளவரசர் பிலிப் முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அவரது தற்போதைய நிலை குறித்து அரண்மனை அதிகாரிகள் கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதில், கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் தொற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் இளவரசர் பிலிப் மேலும் சில நாட்கள் அங்கேயே தொடர்வார்.

அவர் சாதாரண நிலையிலும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பவராகவும் இருக்கிறார், இருப்பினும் பல நாட்கள் மருத்துவமனை சிகிச்சை தொடர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளவரசர் பிலிப் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதேவேளை, 99 வயதான இளவரசர் பிலிப் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிடவில்லை,

ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கொரோனா வைரஸுடன் தொடர்புடையதல்ல என்பதை அரண்மனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியது.

இதனிடையே, நெருக்கடியான சூழ்நிலைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மருத்துவமனை முன்பு கூறிய நிலையில்,

வார இறுதியில் இளவரசர் சார்லஸ் தமது தந்தையின் உடல் நலம் தொடர்பில் விசாரித்து சென்றுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் வசித்துவரும் இளவரசர் ஹரி தமது கர்ப்பிணி மனைவியுடன் தாத்தாவை சந்திக்கும் பொருட்டு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும்,

தேவையெனில் புறப்பட தயாராக தனியார் விமானம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்