பிரித்தானியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சோதனை கிட்களை வழங்கிவரும் NHS! ஒரு வருடம் கழித்து சோதனை மீண்டும் தொடக்கம்

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் NHS சோதனையின் ஒரு பகுதியாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய ஆரம்ப எச்சரிக்கைகளைச் சரிபார்க்க லண்டனில் சுமார் 31,000 பெண்களுக்கு "do-it-at-home" சோதனை கிட்கள் வழங்கப்படுகின்றன.

கொரோனா தொற்று குறித்த பயம், கலாச்சார தடைகள் மற்றும் பல காரணங்களுக்காக பெரும்பாலான பெண்கள் ஒரு கிளினிக் அல்லது பொது மருத்துவரை அணுகி smear சோதனை செய்வதை தவிர்த்துவருகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறு வீடுகளில் சுய சோதனை செய்யும் கிட்களை வழங்குவதன்முலம், அதிகமான பெண்களை திரையிட ஊக்குவிப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு வருடமாக பெண்களுக்கான உடல்நல சோதனைகள் தடைப்பட்டிருந்த நிலையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளள்ளன.

இந்தக் கிட்டை பயன்படுத்தி பெண்கள் சுயமாக சோதனைக்கான மாதிரியை எடுத்து, பின்னர் அதை சோதனைக்காக தபால் மூலம் அனுப்பவேண்டும். இதன்முலம் பல பெண்களுக்கு கேன்சர் பரவாமல் தடுக்க உதவும். மேலும், ஆரம்பத்தில் புற்றுநோயைக் கண்டுபிடித்து சிகிச்சையளிப்பது உயிர்களைக் காப்பாற்றும்.

ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திலும் கொரோனா வைரஸ் உரடங்கின் போது நிறுத்தப்பட்டிருந்த நேரிடி திரையிடல்கள், இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்