பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு எச்சரிக்கை! இதை செய்ய வேண்டாம் என துணை தலைமை மருத்துவர் அதிகாரி விளக்கம்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

கொரோனாவிற்கான தடுப்பூசிகளை தாத்தா மற்றும் பாட்டிகள் போட்டிருந்தாலும், அவர்களை அதிகம் கட்டிபிடிக்க வேண்டாம் என்று துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான எடுக்கப்பட்டு வரும் நடிவடிக்கைகளில், தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது.

மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கொடுப்பதன் மூலம், இந்த கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், துணை தலைமை மருத்துவ அதிகாரி Jenny Harries, இன்று பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாத்தா பாட்டிகள் கொரோனா தடுப்பூசிகளை போட்டிருந்தாலும், குழந்தைகள் அவர்களை அதிகம் கட்டிப்பிடிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

ஏனெனில் பள்ளிகளில் சோதனைத் திட்டம் என்று உள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளி குழந்தைகள், எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் அளவாக இருப்பதன் மூலம், சமூகங்களிலும், குடும்பங்களிலும் பரவும் இந்த கொரோனா சங்கிலியை உடைக்க முடியும், அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

அதற்கான சிறிய எச்சரிக்கையாக, நான், தாத்தா பாட்டிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும், அவர்கள் இன்னும் வெளியேறக் கூடாது என்று ஊக்குவிப்பேன், அந்த தடுப்பூசியின் தாக்கம் என்ன என்பதை நாங்கள் உறுதியாக நம்பும் வரை அவர்களை அதிகம் கட்டிப்பிடிக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்