வீட்டை விட்டு வெளியே போ என்றாள்! லண்டனில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் மீதான குற்றம் உறுதி! தண்டனை எப்போது?

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares

லண்டனில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 26ஆம் திகதி தண்டனை விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

லண்டனின் எட்மண்டனை சேர்ந்தவர் ஹுசைன் யூசப் இகல் (66). இவர் மனைவி மர்யன் இஸ்மாயில் (57).

கடந்தாண்டு ஏப்ரல் 6ஆம் திகதி சாலையில் சென்ற நபர் ஒருவரை அணுகிய யூசப் தனது மனைவியை தான் கொலை செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

இதையடுத்து அந்த நபர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் பொலிசார் உடனடியாக யூசப் வீட்டுக்கு வந்த போது அங்கு மர்யன் சடலமாக கிடந்தார். அவர் உடல் முழுவதும் காயம் இருந்தது. இதை தொடர்ந்து பொலிசார் யூசப்பை கைது செய்தனர்.

விசாரணையின் போது ஏப்ரல் 5ஆம் திகதியே மனைவியை கொலை செய்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் தனக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் தன்னை வீட்டை விட்டு போகுமாறு மர்யன் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது என்னை மர்யன் தாக்கினாள், இதையடுத்தே என்னை தற்காத்து கொள்ள அவரை கொலை செய்ததாக யூசப் கூறினார்.

ஆனால் யூசப் உடலில் எந்தவொரு காயமும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் யூசப் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து 26ஆம் திகதி யூசப்புக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

இது குறித்து டிடெக்டிவ் செர்ஜண்ட் லூசி கார்பெரி கூறுகையில், தன்னை தற்காத்து கொள்ள யூசப் மனைவியை தாக்கியதாக கூறினார். ஆனால் அவர் உடலில் எந்தவொரு காயமும் இல்லை.

இது போன்ற பிரச்சினைகளை சந்தித்து ஆபத்தில் இருப்பதாக உணர்பவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுங்கள்.

நீங்கள் கொடுக்கும் உடனடி தகவல் ஒருவர் உயிரை காப்பாற்றும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்