பிரித்தானியாவிற்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர் வழக்கு! எந்த தடையும் இல்லை என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

வங்கி மோசடியில் ஈடுபட்டு, லணன் தப்பியோடிய இந்திய கோடீஸ்வரர் நீரவ் மோடியை நாடு கடத்த எந்த தடையும் இல்லை என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான சான்றுகளை அளித்து அதன் மூலம் சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போது, லாவோசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற நிரவ் மோடி, அதன் பிறகு நாடு திரும்பவில்லை.

அங்கிருந்து அதன் பின் பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றார். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பிரித்தானியா காவல்துறை அவரை லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச்சில் கைது செய்தது.

அதே போல அவருக்குச் சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

விலையுயர்ந்த பொருட்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்தனர். மேலும் நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன.

மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரித்தானியாவின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்காகச் சட்ட ரீதியிலான முன்னெடுப்புகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாமுவேல் கூஸ் இன்று தீர்ப்பை வழங்கினார்.

அதன்படி நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை ஏதும் இல்லை எனத் தீர்ப்பளித்தார்.

நீதிபதி சாமுவேல் கூஸ் தனது தீர்ப்பில், நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை.

இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது. நாடுகடத்தப்பட்டால் நீரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என இந்திய அரசு உறுதியளித்துள்ளது.

இதனை நீதிமன்றம் ஏற்கிறது. சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நீரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்