பிரித்தானியாவில் நடந்த கத்தி குத்து! உயிருக்கு போராடும் பெண்: 30 வயது நபர் பலியான சோகம்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் கத்து குத்து சம்பவம் காரணமாக 30 வயது நபர் உயிரிழந்த நிலையில், பெண் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Coventry குடியிருப்பு வீதியில், கடந்த வியாழக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 11.20 மணிக்கு இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

இந்த கத்தி குத்து சம்பவம் குறித்து அங்கிருக்கும் நபர்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு 30 வயது ஆண் நபர் உயிரிழந்துவிட்டார்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் பலத்த கத்தி குத்து காயங்களுடன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 36 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை பொலிசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவென்ட்ரி காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் மைக் ஓ ஹாரா கூறுகையில், இது ஒரு கொடூரமான சம்பவம், இதன் விளைவாக ஒரு மனிதன் இறந்து ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விசாரணை மிக விரைவாக நகர்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் தெரிந்த எவரும், எங்களுக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,ஆபத்தான நிலையில் உள்ள ஒருவரைக் கண்டுபிடிக்க குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, அவரைக் காப்பாற்ற எதுவும் செய்ய முடியவில்லை, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இரண்டாவது நோயாளி, ஒரு பெண், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறியுள்ளார்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்