தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக பிரித்தானியாவை விட்டு ஓடிப்போன இளம்பெண்: நீதிமன்றம் அதிரடி

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக பிரித்தானியாவை விட்டு ஓடிப்போன இளம்பெண்ணை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

15 வயதில், ஒரு மாணவியாக இருக்கும்போது ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலிருந்து மேலும் இரண்டு இளம்பெண்களுடன் சிரியாவுக்கு ஓடினார் ஷமீமா பேகம் (21).

2019ஆம் ஆண்டு, அவரைக் குறித்த செய்திகள் மீண்டும் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி அவரது பிரித்தானிய குடியுரிமை பறிக்கப்பட்டது.

அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக பிரித்தானியாவுக்குள் தன்னை அனுமதிக்கவேண்டும் என கோரினார் ஷமீமா பேகம்.

ஷமீமா நேர்மையாக முறையீடு செய்யவேண்டுமானால் அவரை பிரித்தானியா வர அனுமதிக்கவேண்டும் என கடந்த ஜூலை மாதம் மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து, உள்துறை அலுவலகம், நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

ஷமீமாவை நாட்டுக்குள் அனுமதிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அளவில் அபாயம் ஏற்படும் என்றும், பொதுமக்கள் தீவிரவாதத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையை சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் வாதிட்டது.

இன்று வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஷமீமாவை மேல் முறையீடு செய்வதற்காக பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்