வீட்டை அழகுபடுத்த விரும்பும் காதலிக்காக இரகசியமாக தொண்டு நிறுவனம் அமைக்கும் பிரித்தானிய அமைச்சர்: யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

தானும் தன் காதலியும் வசிக்கும் வீட்டை அழகுபடுத்துவதற்கு பணம் வேண்டும் என்பதற்காக, இரகசியமாக ஒரு தொண்டு நிறுவனத்தை ஒரு அமைச்சர் உருவாக்குவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அந்த அமைச்சர், சாட்சாத் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனேதான்! ஏற்கனவே அரசியல் விவகாரங்களில் ஈடுபடுகிறார் என போரிஸ் ஜான்சனின் மனைவியான கேரி சைமண்ட்ஸ் மீது எக்கச்சக்க புகார்கள்.

இதில் அவர் தன் காதலரான பிரதமருடன் வசிக்கும் வீட்டை அழகுபடுத்த பெரும் தொகை எதிர்பார்க்கிறாராம் (பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கேரிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)! இந்த இலட்சணத்தில், அவர் தாங்கள் வசிக்கும் வீட்டை அழகுபடுத்த விரும்புகிறாராம்.

ஏற்கனவே, கேரி வீட்டை அழகுபடுத்த அதிகம் செலவிடுவதாக போரிஸ் ஜான்சனே குறைபட்டுக்கொண்டுள்ளார். அதற்காக பல ஆயிரக்கணக்கில் கேரி செலவிடுவதாக அவர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தாராம்.

ஒரு முறை, ஒரு அமைச்சரிடம், கேரி தங்கள் வீட்டு சுவர்களில் ஒட்டுவதற்காக வால் பேப்பர் ஆர்டர் செய்ததாகவும், அது தங்க நிற வால் பேப்பர் என்றும், அதன் விலையைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவரே கூறியுள்ளார்.

இந்நிலையில்தான், தன் காதலியின் வீட்டை அழகு படுத்தும் செலவுகளுக்காக என்றே தனியாக ஜான்சன் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்