லண்டனில் பெண்ணை பின்பக்கத்தில் எட்டி உதைத்து கீழே தள்ளிய நபர்! பின்னர் மேற்கொண்ட செயல்... நீதிமன்றம் அளித்துள்ள தண்டனை

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares

லண்டனில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு தாக்கி அவரிடம் இருந்து பையை திருடி கொண்டு சென்ற குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி 87 வயதான பெண் ஒருவர் பேருந்தில் ஏறி சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.

அங்கு தனக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்ட அவர் மீண்டும் பேருந்தில் ஏறி வீடு திரும்பினார்.

வீட்டுக்குள் நுழைய கதவு அருகில் வந்த போது கோலில் ரிட் (42) என்ற நபர் மூதாட்டி அருகில் வந்து அவரிடம் இருந்த பையை திருட முயன்றான்.

ஆனால் அவனால் பையை எடுக்க முடியாத நிலையில் மூதாட்டியை பின்பக்கத்தில் வேகமாக எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளான்.

பின்னர் பையை எடுத்து கொண்டு தப்பினான், ஆனால் அந்த பைக்குள் அவன் எதிர்பார்த்த மாதிரி பெரியளவில் பணம் இல்லாத நிலையில் வெறும் £60 பணம் தான் இருந்தது.

இந்த நிலையில் கை, முழங்கால்கள் மற்றும் பின்புறத்தில் அப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சூழலில் தலைமறைவாக இருந்த கோலில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டான்.

அவன் மீதான வழக்கு விசாரணை சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன் தினம் வழக்கில் தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

அதன்படி கோலிலுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்