பிரித்தானியா இளவரசர் உடல்நிலை குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல்!

Report Print Basu in பிரித்தானியா
0Shares

St Bartholomew’s மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரித்தானியா இளவரசர் பிலிப் உடல்நிலை குறித்து பக்கிங்காம் அரண்மனை முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 16ம் திகதி லண்டனில் உள்ள King Edward VII’s மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசர் பிலிப், மார்ச் 1ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக St Bartholomew’s சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

99 வயதான இளவரசர் பிலிப் தொடர்ந்து 17 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பக்கிங்காம் அரண்மனை தரப்பில் வெளியிடப்பட்ட தகவின் படி, St Bartholomew’s மருத்துவமனையில் இளவரசருக்கு இருந்த இதய பிரச்சினைக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை, ஓய்வு மற்றும் உடல்நலக் குறைவில் இருந்து மீள இளவரசர் பிலிப் தொடர்ந்து சில நாட்களுக்கு மருத்துவமனையிலே இருப்பார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்