பிரித்தானியாவில் உடல் முழுதும் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்! விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்கள்

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் வீட்டில் தனியாக இருந்த 85-வயது மூதாட்டி நாய்களால் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று, West Midlands-ல் Dudley-க்கு அருகிலுள்ள Rowley Regis பகுதியில் ஒரு வீட்டில் 85 வயதாகும் மூதாட்டி, இரண்டு நாய்கள் கடித்ததில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார்.

அவசரகால சேவைகளின் முயற்சி செய்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரை கடித்துகே குதறிய இரண்டு நாய்களையும் பொலிஸார் கைப்பற்றினர். அவை இறந்துபோன பெண்ணுக்கு சொந்தமான நாய்கள் இல்லை என அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் தெரியவந்தது.

ஆனால், இரண்டு நாயகளும் எப்படியோ தோட்டத்துக்குள் புகுந்து அவரை கடித்து குத்தறியுள்ளது என்று West Midlands பொலிஸ் தெரிவித்துள்ளது.

பிடிக்கப்பட்ட இரண்டு நாய்களும் எந்த இனத்தை சேர்ந்தவை என கண்டறிய சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அந்த நாய்களின் உரிமையாளர் என்ற சந்தேகத்தின் பேரில் 43 வயதான உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் முழுவதும் நாய் கடித்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர், இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை சரியான நேரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் என்ன நடந்தது என்பதற்கான முழு விவரங்களையும் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு பொலிஸ் குழு Boundary Avenue பகுதியில் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்