லண்டனில் பொலிஸுடன் மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்: பெண் உட்பட 26 பேர் கைது

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

லண்டனில் 'கில் தி பில்' போராட்டத்தில் பொலிஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் 26 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் புதிய பொலிஸ் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் முக்கிய நகரங்களில் பொது மக்கள் "Kill the Bill" எனும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்துவரும் நிலையில், சனிக்கிழமை மாலை மத்திய லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இணைந்தனர்.

கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் பெருநகர காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை தள்ளிவிட்டதால், திடீரென ஆர்பாட்டக்கார்கள் பொலிஸ் அதிகாரிகளை தாக்கினர்.

பொலிஸ் மீது கற்கள் போன்ற கனமான பொருட்கள் எறியப்பட்டன. இதில் சுமார் 10 அதிகாரிகள் காயமடைந்தனர்.

கலவரம் அதிகரித்த நிலையில், பொலிஸ் மீது தாக்குதல் நடத்துதல், அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக Met பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ஒரு பெண்ணை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸ், அப்பெண்ணிடம் மிகவும் ஆபத்தான ஆயுதமான கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

பொலிஸுக்கு கூடுதல் அதிகாரத்தை கொடுக்கும் புதிய பொலிஸ் மற்றும் க்ரைம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து "Kill the Bill" என அழைக்கப்படும் இந்த போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

இந்த போராட்டம் லண்டனில் மட்டுமல்லாமல் பர்மிங்காம், லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல், நியூகேஸில், பிரைட்டன், போர்ன்மவுத், வெய்மவுத் மற்றும் லூட்டன் என பிரித்தானியா முழுவதும் முக்கிய நகரங்களிலும் நடத்தப்பட்டுவருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்