மேகன் மார்க்கல் 'இனி பிரித்தானியா பக்கமே வரமாட்டார்' - அரச குடும்பத்துடன் நெருக்கமான நபர் பரபரப்பு!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

ராயல் குடும்பத்தை தாக்கி கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பிறகு, மேகன் மார்கல் நிச்சயமாக பிரித்தானியாவுக்கு திரும்ப வரவே மாட்டார் என அரச எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஓப்ரா வின்ஃப்ரே உடனான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் பரபரப்பான நேர்காணல், அவர்களுக்கும் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் குடும்பத்தினருக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கியுள்ளது.

மேகன் மார்க்கல் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் அரச குடும்பத்தினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேர்காணலில் பல பொய்களைக் கூறிய மேகன் மார்க்கல், அரச குடும்பத்தினரின் ஆதரவை மட்டுமின்றி பிரித்தானிய மக்களின் ஆதரவையும் இழந்துவிட்டதால், இனி அவர் பிரித்தானியாவுக்கு வருவதையே நிறுத்திவிடுவார் என பிரபல அரச எழுத்தாளரும், பத்திரிகையாளருமான Anna Pasternak கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, "துரதிர்ஷ்டவசமாக மேகன் பிரிட்டிஷ் மக்களின் ஒருங்கிணைந்த மரியாதையுடன் அரச குடும்பத்தின் அன்பான மற்றும் நேசத்துக்குரிய உறுப்பினராக திரும்ப மாறுவார் வதை என்னால் பார்க்க முடியாது. அந்தக் கப்பல் பயணித்தது பயணித்ததாகவே இருக்கும் என நான் நினைக்கிறேன்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "ராயல்ஸ் தங்கள் குடும்ப விஷயங்களை தனிப்பட்டதாக வைத்திருப்பதாக அறியப்படுகிறது, ஆனால் மேகனின் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளால் அவர்கள் கடும் கோபத்தில் இருப்பார்கள்" என்று கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்