பிரித்தானியர்களுக்கு இது கட்டாயமில்லை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
0Shares

இந்த கோடையில் ஸ்பெயினில் உள்ள பலேரிக் தீவுக்கு சுற்றுலா வர திட்டமிட்டுள்ள பிரித்தானியர்கள் முகக் கவசம் அணிந்த படி சூரிய குளியல் ஈடுபட வேண்டியதில்லை என்று ஸ்பெயின் MEP José Ramón Bauzà வலியுறுத்தியுள்ளார்.

ஸ்பெயினின் அரசாங்கம் கடந்த வாரம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து José Ramón Bauzà இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

ஸ்பெயினில் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத பகுதியில் மட்டும் முகக் கவசங்களை அணியலாம் என கடந்த கோடையில் மே மாதத்திலிருந்து நடைமுறையில் இருந்த விதியை புதிய சட்டம் மாற்றியது.

புதிய சட்டத்தின் படி, சூரிய குளியல் அல்லது கடற்கரைகளில் நடக்கும்போது உட்பட மக்கள் வெளியில் எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும் என ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்தது.

புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த José Ramón Bauzà, கடற்கரையில் திறந்தவெளியில் நம்மை சுற்றி யாரும் இல்லாத பகுதியில் முகக் கசவம் அணிய வேண்டும் என்பது அர்த்தமில்லாதது என கூறினார்.

José Ramón Bauzà, 2011 முதல் 2015 வரை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சுற்றுலா பணிக்குழுவின் உறுப்பினரும், பலேரிக் தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்