வரும் 12-ஆம் திகதி முதல் இவை அனைத்து மீண்டும் திறக்கப்படும்! பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் அனைத்து அத்தியாவசியக் கடைகள் வரும் 12-ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் ஊரடங்கு விதிகள் ஒவ்வொரு பகுதிகளிலும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன், இங்கிலாந்து ஊரடங்கை தளர்த்துவதற்கான அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று சற்று முன் அறிவித்துள்ளார்

இன்று பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிம்கள், சிகையலங்கார கடைகள் மற்றும் விடுமுறை முகாம்கள் மீண்டும் திறக்கப்படலாம். உணவகத்தின் வெளிப்புற பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவுகள் கொடுத்து சேவை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் பொறுமைக்காக நான் மீண்டும் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன், உங்கள் கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியம்.

(Picture: PA)

31 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்கள் தங்கள் இரண்டாவது தடுப்பூசியை பெறத் தொடங்கியுள்ளனர்.

இதன் விளைவாக வரும் 12-ஆம் திகதி அதாவது திங்கள் முதல். நாங்கள் எங்களின் Road Map படி அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ளோம் என்பதை உறுதிபடுத்துகிறோம்.

(Picture: PA)

கடைகள், ஜிம்கள், உயிரியல் பூங்காக்கள், விடுமுறை முகாம்கள், சிகையலங்கார கடைகள், தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள், ஹோட்டல்களில் அனைத்து வகையான வெளிப்புற சேவைகள், பராமரிப்பு இல்லங்களில் ஒருவருக்குப் பதிலாக இரண்டு பார்வையாளர்கள் அனுமதிக்கபடுவர் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் ஊரடங்கு விதிகள் தளர்த்துவது குறித்து மக்கள் மனநிறைவு கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ள பிரதமர் போரிஸ், மற்ற நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை பார்த்து வருவதாகவும், இதனால் கொரோனா பாதிப்பு உயரத் துவங்கும் போது, தடுப்பூசி கவசம் எவ்வளவு வலிமையாக இருக்கும் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால், தயவுசெய்து உங்கள் தடுப்பூசி அல்லது உங்கள் இரண்டாவது தடுப்பூசியை பெறுங்கள். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உடனடியாக இலவச NHS சோதனைகளைப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த வார இறுதியின் விடுமுறை நாட்களில் இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு பெரியவருக்கும் வைரஸ் பரவுவதைத் தடுக்க வாரத்திற்கு இரண்டு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்