லண்டனில் மகனை நினைத்து நரக வேதனையில் தவிக்கும் தாய்! உதவியற்றவளாக உணர்கிறேன் என கண்ணீர்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

லண்டனில் 19 வயது சிறுவன் ஒருவன் காணமல் போன நிலையில், சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Ladbroke Grove பகுதியை சேர்ந்த சிறுவன் Richard Okorogheye. 19 வயதான இவர் பல வாரங்களாக காணவில்லை, பொலிசார் தொடர்ந்து இவரை தேடி வந்த நிலையில், அங்கிருக்கும் Epping நதிக்கரையில், சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.

இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று பிற்பகல் EppingForest பகுதியில் உள்ள குளத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் யார் என்பதை உறுதி செய்வதற்காக Richard Okorogheye-வின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனதாகக் கூறப்படும் சிறுவன், கடந்த மார்ச் மாதம் 22-ஆம் திகதி மேற்கு லண்டனின் Ladbroke Grove பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

கடைசியாக அவர் மார்ச் 23-ஆம் திகதி அதிகாலை EppingForest நோக்கி நடந்து செல்வதை சிசிடிவி மூலம் பார்க்க முடிகிறது.

சிறுவனின் தாயார் உடலை கண்டுபிடிப்பதற்கு முன், தனது மகன் இருக்கும் இடம் பற்றிய தகவலுக்காகக் காத்திருப்பதாகவும், இது ஒரு நரக வேதனை என்று கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு நாளும் இப்போது எனக்கு ஒரு கனவுதான். நான் முற்றிலும் உதவியற்றவளாக உணர்கிறேன்.

நான் பயனற்றதாக உணர்கிறேன். நான் அங்கு செல்ல விரும்புகிறேன், அவனைத் தேடுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும்,

எல்லோரும் உன்னை இழக்கிறார்கள், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், நான் உன்னை வீட்டிற்கு விரும்புகிறோம், தயவுசெய்து வீட்டிற்கு வா என்று வேதனையுடன் கூறினார்.

காணமல் போன Richard Okorogheye ஒரு உயிரணு நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, அவர் எப்போதும் வழக்கமான இரத்தமாற்றத்திற்காக மருத்துவமனைக்குச் செல்வதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம் Richard Okorogheye தானா? இல்லையா? என்பது குடும்பத்தார் பார்த்து கூறிய பின்னரே தெரியவரும். ஆனால் கடைசியாக சிறுவன் EppingForest பகுதியில் காணப்பட்டுள்ளதால், அவராக தான் இருக்கும் என்று பொலிசார் நம்புகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்