பிறந்த குழந்தையை முதன்முறையாக வெளியே கொண்டுவந்த பெற்றோர்... இரண்டு வாரங்களே வாழ்ந்த நிலையில் கார் மோதி பலியான பரிதாபம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

குறை பிரசவத்தில் பிறந்த தங்கள் குழந்தையை முதன்முறையாக அதன் பெற்றோர் வெளியே கொண்டுவந்த நிலையில், கார் ஒன்று மோதியதில் அந்த குழந்தை பரிதாபமாக பலியானது.

இங்கிலாந்திலுள்ள Walsall என்ற இடத்தில், 18 வயதே ஆகும் இளம் தம்பதியரான Camaron Morris மற்றும் Codie Holyman இருவரும், முதன்முறையாக தங்கள் குழந்தையை தள்ளுவண்டி ஒன்றில் வைத்து நடைபாதையில் தள்ளிக்கொண்டு சென்றிருந்திருக்கின்றனர்.

அப்போது, வேகமாக வந்த ஒரு கார் மற்றொரு காருடன் மோதிவிட்டு நடைபாதையில் ஏறியுள்ளது.

சரியாக அப்போது Camaron, Codie தம்பதி தங்கள் குழந்தையான Ciaran Leigh Morrisஉடன் அந்த நடைபாதையில் நடந்துகொண்டிருக்க, அந்த கார் குழந்தையின் தள்ளுவண்டி மீது மோதி, சுவருடன் வைத்து நசுக்கியுள்ளது.

காரை செலுத்திய நபர் தப்பியோட, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் மருத்துவர்களால் அதைக் காப்பாற்ற இயலவில்லை.

குறை பிரசவத்தில் பிறந்த Ciaran, பிறந்து இரண்டு வாரங்களே வாழ்ந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துவிட்டான்.

Ciaranஇன் பெற்றோர் வெறும் 18 வயதேயான சின்னஞ்சிறுசுகள் என்பதால், அந்த துயரத்தை தாங்க இயலாமல் தவித்து வருகிறார்கள்.

தங்கள் மகன் கொல்லப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட பூச்செண்டுகளையும், இரங்கல் செய்திகளையும் பார்த்துக்கொண்டே வெகு நேரம் அங்கேயே நின்றார்களாம் இருவரும். இதற்கிடையில், காரை மோதிவிட்டு தப்பியோடிய James Paul Davis (34) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

James இன்சூர் செய்யப்படாத காரை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது அபாயகரமாக கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியது, இன்சூர் செய்யப்படாத காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியது, விபத்து குறித்து பொலிசாருக்கு தெரிவிக்காமல் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பியோடியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்