சினிமாவில் நடித்து ராஜ குடும்பத்துக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று மேகனை வற்புறுத்தினாரா மகாராணியார்: இதுவரை வெளிவராத ஒரு உண்மை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

ஓபரா விஃப்ரேக்கு பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டியின் தாக்கமும் இன்னமும் குறைந்தபாடில்லை.

அந்த பேட்டியில், ஹரியின் மனைவி மேகனுக்கு கொடுப்பதற்கு போதுமான பணம் இல்லை என்றும், அதனால் மேகன் தொடர்ந்து நடித்து ராஜ குடும்பத்துக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றும், தங்கள் திருமணத்துக்கு முன்பே கூறப்பட்டதாக கூறியிருந்தார் ஹரி.

ஆனால், தற்போது இது குறித்து பேசியுள்ள இளவரசி டயானாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான Andrew Morton, ஹரி தனக்கு கூறப்பட்ட விடயத்தை திரித்துக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, மேகன் திருமணமாகி ராஜ குடும்பத்திற்குள் வந்த பிறகு, தம்பதியர் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும், ஹரி மேகன் தம்பதியை காமன்வெல்த் இளைஞர் தூதுவர்களாக ஆக்க இருப்பதாகவும் மகாராணியார் தெரிவித்துள்ளதாக Morton தெரிவித்துள்ளார்.

அத்துடன், ராஜ குடும்ப பொறுப்புகளை முழு நேரம் செய்ய விரும்பாவிட்டால், மேகன் தொடர்ந்து நடிக்கலாம் என்றும் மகாராணியார் கூறியதாகவும், அப்போது அதை தம்பதியர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார் Morton.

ஆக, ஹரி மேகன் ஓபரா பேட்டியில் கூறிய பல விடயங்கள் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஹரியின் மனைவி மேகனுக்கு கொடுப்பதற்கு போதுமான பணம் இல்லை என்றும், அதனால் மேகன் தொடர்ந்து நடித்து ராஜ குடும்பத்துக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்