கண்ணுக்கு முன்னே மூழ்கிய டைட்டானிக் கப்பல்... தப்பிய பெண் ஒருவர் எழுதிய திகில் கடிதம் இதோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

கண்ணுக்கு முன்னே டைட்டானிக் கப்பல் மூழ்குவதைப் பார்த்த பெண் ஒருவர், தன் தந்தைக்கு தான் கண்ட காட்சிகளை திகிலுடன் விவரிக்கும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

மூழ்காத கப்பல் என பெயெரெடுத்த டைட்டானிக், 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி, பனிப்பாறை ஒன்றில் மோதியபோது கப்பலிலிருந்தவர்களில் ஒருவர் Marion Wright. அப்போது அவருக்கு 26 வயது.

இரண்டாம் வகுப்பில் பயணித்த Marion, தன் அறையில் படுத்திருக்கும்போது, திடீரென ஏதோ ஒன்றுடன் கப்பல் மோதும் அதிர்ச்சி ஏற்படுவதை உணர, சிறிது நேரத்தில் மொத்த எஞ்சினும் செயலிழந்திருக்கிறது.

Image: Getty Images

இங்கிலாந்திலுள்ள Yeovil என்ற இடத்தைச் சேர்ந்த Marion, கப்பலில் பயணிக்கும்போது, தன் ஊரைச் சேர்ந்தவரான Dr Alfred Pain (24) என்பவரை சந்தித்துள்ளார்.

அந்த Alfredதான் Marionஐ உயிர் காக்கும் படகு ஒன்றில் ஏற்றிவிட்டிருக்கிறார். ஆனால், Marion காப்பாற்றப்பட, Alfred கப்பல் மூழ்கும்போது உயிரிழந்ததை வேதனையுடனும் பயத்துடனும் தான் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக உயிர் காக்கும் படகுகளிலிருந்த தங்கள் கண்களுக்கு முன்னே டைட்டானிக் மூழ்குவதை பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்திருந்திருக்கிறார்கள் Marionம் அவருடன் படகிலிருந்த மற்றவர்களும்.

Image: H.Aldridge&Sons/BNPS

தனக்கு நிச்சயம் செய்திருந்த கணவருடன் இணைந்துகொள்வதற்காக அமெரிக்காவிலுள்ள Oregon மாகாணத்திற்கு சென்றுகொண்டிருந்த Marion, Carpathia எனும் மீட்பு படகிலிருந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

தற்போது, அந்த கடிதம், இம்மாதம் 17ஆம் திகதி ஏலம் விடப்பட உள்ளது. அது 6,000 பவுண்டுகள் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image: H.Aldridge&Sons/BNPS

அந்த கடிதத்தின் ஏலத்தை நடத்த இருக்கும் Andrew Aldridge என்பவர், அந்த கடிதத்தை படிக்கும்போது, படிப்பவர்களை Marion அப்படியே தன்னுடன் அந்த உயிர் காக்கும் படகுக்கே கொண்டு சென்றுவிடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது என்கிறார்.

1965ஆம் ஆண்டு. Marion தன் 80ஆவது வயதில் Oregonஇல் இயற்கை எய்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்