இளவரசர் ஹரி தான் அடுத்து மன்னராக வேண்டும்! இளம் பிரித்தானியர்களின் விருப்பம்-கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

ராணியின் ஆட்சி முடிவடையும் போது இளவரசர் ஹரி அடுத்த மன்னராக மாற வேண்டும் என்று இளம் பிரித்தானியர்கள் நினைக்கிறார்கள் என ஒரு புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ராயல் குடும்பம் தொடர்பாக இளவரசர் ஹரி ஏற்படுத்திய சர்ச்சைகள் இருந்தபோதிலும், ராணி இறக்கும் போது சசெக்ஸ் டியூக் அரியணையை கைப்பற்ற வேண்டும் என்று இளம் பிரிட்டன் நம்புகிறார் .

Deltapoll வழியாக டெய்லி மிரரில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்புக்கு பிரித்தானியா முழுவதிலுமிருந்து 1,590 பேர் பதிலளித்தனர். அவர்களில் பலர் இளவரசர் ஹரிக்கு ஆதரவாக பதிலளித்துள்ளார்.

வாக்கெடுப்பாளர்கள் 24 முதல் 40 வயதுக்குட்பட்ட மில்லினியல்ஸ் மற்றும் 57 முதல் 75 வயதுக்குட்பட்ட பேபி பூமர்ஸ் என முக்கியமாக இரண்டு முக்கிய குழுக்களாக வகைப்படுத்தப்பட்டனர்.

வாக்கெடுப்பின் முடிவுகளின்படி, மில்லினியல்ஸ் 23 சதவிகிதம் இளவரசர் ஹரி அடுத்த மன்னராக தேர்வு செய்தனர்.

அதேபோல், 5 சதவிகித பூமர்ஸ் அதே முடிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த வாக்காளர்களில் 28 சதவிகிதத்தினர் சிம்மாசனத்தில் ஹரிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சமீபத்திய சர்ச்சைகள் இருந்தபோதிலும், கால்வாசி வாக்காளர்கள் ஹாரிக்கு வாக்களித்தனர்.

இது குறித்து முடியாட்சி எதிர்ப்பு குழு குடியரசின் தலைமை நிர்வாக அதிகாரி Graham Smith கூறுவது “வாக்கெடுப்புகள் என்ன சொன்னாலும் இளவரசர் சார்லஸ் மன்னராக இருப்பார்.

இந்த வாக்கெடுப்பு மக்களுக்கு பரம்பரை முறையைப் பற்றி கவலைப்பவில்லை என்று தெரிகிறது, மேலும் அவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை தேர்வு செய்யவே விரும்புகிறார்கள் என்பதும் தெரிகிறது.

இது, தலைமுறைகளுக்கு இடையிலான மிகப்பெரிய இடைவெளி இந்த நவீன அணுகுமுறைகளிலிருந்து ராயல்ஸ் எவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்றார்.

வாக்கெடுப்பின் பொதுவான தகவல்களின்படி, 18 சதவீத மக்கள் பிரித்தானியாவில் முடியாட்சியை ஒழிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சுவாரஸ்யமாக இந்த வாக்கெடுப்பில், வரிசையில் இருக்கும் இளவரசர் சார்லஸை விட அவரது மகன் இளவரசர் வில்லியமை மன்னராக பார்க்க விருப்பப்படுவதை காட்டியுள்ளது.

அதாவது, மொத்த வாக்கெடுப்பில் இளவரசர் சார்லஸுக்கு 27 சதவீதம் மட்டுமீ வாக்களித்தனர். ஆனால், ​​47 சதவீதத்தினர் வில்லியம் அரியணையைப் பெறுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், முறைப்படி இளவரசர் சார்லஸ் அடுத்த மன்னராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்