பிரித்தானியாவில் வயதான கோடீஸ்வர தாயின் £70,000 பணத்தை பாலியல் தொழிலாளிகளிடம் செலவழித்த மகன்! அம்பலமான பகீர் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் தனது வயதான கோடீஸ்வர தாய்க்கு சொந்தமான £70,000 பணத்தை பாலியல் தொழிலாளிகளிடமும், சூதாட்டத்திலும் மகன் செலவழித்த சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

ரூபர்ட் கிளார்க் என்பவர் தனது தாயார் ஜெனட் (92) உடன் வசித்து வந்தார்.

வயது மூப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக ஜெனட் தொடர் ஓய்வில் இருந்தார்.

பெரும் கோடீஸ்வர பெண்ணான ஜெனட்டுக்கு நிறைய சொத்துக்கள் இருந்தது.

இந்த நிலையில் தாயாரின் சொத்துக்களை அனுபவிக்கும் அதிகாரத்தை ரூபர்ட் பெற்றார்.

பின்னர் அதிலிருந்து £70,000 பணத்தை பாலியல் தொழிலாளிகளிடமும், சூதாட்டத்திலும் ரூபர்ட் செலவு செய்திருக்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் முதல் 2019 மே வரை பலமுறை வங்கிகளில் இருந்து பணத்தை அவர் எடுத்திருக்கிறார்.

இதுதவிர ரோமானியாவை சேர்ந்த 5 பெண்களுக்கு £14,800 பணம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மீது வங்கி சார்ப்பில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கானது வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வயதான தாயாரின் நிலையை உபயோகப்படுத்தி மோசடி செய்த குற்றத்திற்காக 22 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் அவர் சிறைக்கு செல்வதற்கு பதிலாக 18 மாதம் கண்காணிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது, அதாவது மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாதவாறு அவர் பார்த்து கொள்ள வேண்டும்.

இதோடு 150 மணி நேரம் எந்தவொரு சம்பளமும் இன்றி பணிபுரியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூபர்ட் மீது ஏற்கனவே எந்தவொரு குற்ற வழக்கும் இல்லாததாலும் அவரால் யாருக்கும் ஆபத்து இல்லை என்பதாலும் சிறை தண்டனையில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்