குழந்தை மீது காரை மோதிவிட்டு தப்பியோடியவர் இவர்தான்... நீதிமன்றத்தில் சட்டத்தரணி வெளியிட்டுள்ள புதிய பரபரப்பு தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

இங்கிலாந்தில், பிறந்து இரண்டு வாரங்களேயான குழந்தை மீது காரை மோதிவிட்டு தப்பியோடியவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள Walsall என்ற இடத்தில், 18 வயதே ஆகும் இளம் தம்பதியரான Camaron Morris மற்றும் Codie Holyman இருவரும், முதன்முறையாக தங்கள் குழந்தையை தள்ளுவண்டி ஒன்றில் வைத்து நடைபாதையில் தள்ளிக்கொண்டு சென்றிருந்திருக்கின்றனர்.

அப்போது, வேகமாக வந்த ஒரு கார் மற்றொரு காருடன் மோதிவிட்டு நடைபாதையில் ஏறியுள்ளது.

சரியாக அப்போது Camaron, Codie தம்பதி தங்கள் குழந்தையான Ciaran Leigh Morrisஉடன் அந்த நடைபாதையில் நடந்துகொண்டிருக்க, அந்த கார் குழந்தையின் தள்ளுவண்டி மீது மோதி, சுவருடன் வைத்து நசுக்கியுள்ளது.

காரை செலுத்திய நபர் தப்பியோட, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் மருத்துவர்களால் அதைக் காப்பாற்ற இயலவில்லை.

குறை பிரசவத்தில் பிறந்த Ciaran, பிறந்து இரண்டு வாரங்களே வாழ்ந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துவிட்டான்.

Ciaranஇன் பெற்றோர் வெறும் 18 வயதேயான சின்னஞ்சிறுசுகள் என்பதால், அந்த துயரத்தை தாங்க இயலாமல் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், காரை மோதிவிட்டு தப்பியோடியவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. James Paul Davis (43) என்னும் அந்த நபரை சம்பவம் நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் பொலிசார் கைது செய்தனர், அவரிடம் ஓட்டுநர் உரிமமோ காப்பீடோ இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில், அரசு தரப்பு சட்டத்தரணியான Mark Cooper, குழந்தை கொல்லப்பட்டதால் அந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவுவதாகவும், Jamesக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Jamesஐ தாக்க வெளியே மக்கள் காத்திருப்பதாகவும் Mark நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், Jamesஇன் சட்டத்தரணியான Sarbjit Lalli, உண்மையில் தன்னுடைய கட்சிக்காரரான Jamesக்கு விபத்து நடந்தது மட்டுமே தெரியும் என்றும், அவர் காவலில் அடைக்கப்பட்டபின்னரே குழந்தை Ciaran இறந்த விடயம் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்