பிரித்தானியாவின் வேற லெவல் பிளான்! மாடர்னா தடுப்பூசி விநியோகம் தொடக்கம்

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் இன்று முதல் கட்டமாக வேல்ஸ் மக்களுக்கு மாடர்னா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டது.

பிரித்தானியாவில் மூன்றாவதாக அங்கீகரிக்கப்பட்ட மாடர்னாவின் கொரோனா தடுப்பூசியை தற்போது மக்களுக்கு செலுத்த தொடங்கியுள்ளது.

இது அந்நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டம் என கூறப்படுகிறது.

நாட்டில் சுமார் 32 மில்லயன் மக்களுக்கு திட்டமிட்டபடி மிக விரைவாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்களுக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுவிட்டது.

பிரித்தானியாவில் ஏப்ரல் மாதத்தில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் விநியோகம் மிகவும் குறைந்து காணப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நாளொன்றுக்கு மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி வழங்க இன்னும் சில வாரங்கள் தேவைப்படும்.

மேலும், ஆர்டர் செய்யப்பட்டுள்ள 100 மில்லியன் டோஸ்கள் கைக்கு கிடைக்க இன்னும் 4 வாரங்களுக்கு மேல் ஆகலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட 30-கும் மேற்பட்ட மக்கள் அரிய இரத்த உறைவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதில் 7 பேர் உயிரிழந்ததால், அந்த தடுப்பூசிக்கும் இரத்த உறவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட பிரித்தானியா, இந்த இடைப்பட்ட காலத்தை வீணடிக்காமல் Moderna தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

சுமார் 17 மில்லியன் Moderna டோஸ்களை ஆர்டர் செய்துள்ளது. இது 8.5 மில்லியன் மக்களுக்கு போதுமானது.

அதன் முதல் தொகுப்பு தற்போது கிடைத்துள்ள நிலையில், முதல் கட்டமாக இன்று வேல்ஸ் பகுதியில் மக்களுக்கு மாடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக வடக்கு அயர்லாந்துக்கும் ஒரு தொகுப்பு அனுப்பப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்