ஆங் சான் சூகியை விடுவிக்க கோரிய பிரித்தானியாவுக்கான மியான்மரின் தூதர், தூதராக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 1ம் திகதி அன்று அரசியல் தலைவர்களை சிறைபிடித்த மியான்மர் இராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இராணுவத்தின் நடவடிக்கையை எதித்து தேர்தலில் வெற்றிப்பெற்ற ஆங் சான் சூகி மற்றும் அவருடைய NLD கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானியாவுக்கான மியான்மர் தூதர் Kyaw Zwar Minn ஆங் சான் சூகியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து மியான்மரின் இராணுவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் லண்டனில் உள்ள தூதரக கட்டிடத்தை விட்டு தன்னை வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், மேலும் இனி தான் நாட்டின் பிரதிநிதி இல்லை என்றும் தன்னிடம் கூறியதாக Kyaw Zwar Minn தெரிவித்தார்.
Kyaw Zwar Minn லண்டனில் உள்ள மியான்மர் தூதரக கட்டிடத்திற்கு வெளியே தெருவில் நின்றுக்கொண்டு லண்டன் பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வுகளை லண்டனின் நடுவில் ஒரு வகையான அதிகாரத்தை கைப்பற்றும் செயல் இது என்று விவரித்த Kyaw Zwar Minn, இந்த வகையான அதிகாரத்தை கைப்பற்றும் செயல் ஒருபோதும் எடுபடபோவதில்லை என்று கூறினார்.