பிரித்தானியாவின் அடுத்த மன்னராக யார் பொறுப்பேற்க வேண்டும்? மக்களின் ஆசை இது தான்! வெளியான கருத்து கணிப்பு முடிவு

Report Print Basu in பிரித்தானியா
0Shares

பிரித்தானியா ராணி அரியைணையை விட்டு வெளியேறிய பிறகு யார் அடுத்த மன்னராக பொறுப்பேற்க வேண்டும் என Deltapoll மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா மக்களில் பெரும்பாலானோர், இளவரசர் சார்லஸை விட அவரது மகன் இளவரசர் வில்லியமை மன்னராக பார்க்க விரும்புகிறார்கள்

மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் Deltapoll கேள்வி எழுப்பிய 1,590 பேரில் பாதி பேர், 47%, வில்லியம் அடுத்த மன்னராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வில்லயமின் தந்தை சார்லஸ் மன்னராக வேண்டும் என 27% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

18% பேர் பிரித்தானியாவில் இனி மன்னராட்சி இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தனர், 8% பேர் பதிலளிக்க தயங்கினர்.

Deltapoll-ன் இயக்குனர் Joe Twyman தனது ட்விட்டர் கணக்கில் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

இது வெளிப்படையாக பிரிட்டிஷ் பொதுமக்களால் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் இளவரசர் வில்லியம் தான் அதிக வித்தியாசத்தில் முதன்மையானவராக தேர்வு செய்யப்படுகிறார். பெரிய வயது வேறுபாடுகள் உள்ளன.

இருப்பினும், 18 முதல் 24 வயதுடையவர்கள் மத்தியில் ஹரி முதன்மையானவராக உள்ளார் என்று Joe Twyman ட்விட் செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்