வடக்கு அயர்லாந்தில் அதிகரிக்கும் வன்முறை; பேருந்துக்கு தீ வைத்த பிரிட்டிஷ் ஆதரவாளர்கள்! பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்து பகுதியில் உள்ள Belfast நகர்த்தில் வன்முறை அதிகரித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட பிரிட்டிஷ் ஆதரவாளர்கள், வடக்கு அயர்லாந்து பொலிஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் மற்றும் ஒரு பத்திரிக்கையாளரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும், ஒரு தனியார் பேருந்தை கடத்தி பெட்ரோல் குண்டுகள் வீசி எரித்துள்ளனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது. இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடந்த வன்முறை குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "வடக்கு அயர்லாந்தில் வன்முறை காட்சிகளால் நான் மிகவும் கவலைப்படுகிறேன்" என்றும் "வேறுபாடுகளை பேசி தீர்க்கவேண்டும், அதற்கு வன்முறையம் குற்ற செயல்களில் ஈடுபடுவதும் தீர்வு ஆகாது" என கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் விளைவாக வடக்கு அயர்லாந்திற்கும் மற்ற ஐக்கிய இராச்சியத்திற்கும் (UK) இடையிலான புதிய வர்த்தக தடைகளில் பிரிட்டிஷ் சார்பு தொழிற்சங்க சமூகத்தில் பலரிடையே வளர்ந்து வரும் விரக்திக்கு மத்தியில் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய வன்முறை தற்போது அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்