ஐரோப்பிய தடையை மீறி ரகசியமாக பிரித்தானியா செய்த செயல்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Report Print Basu in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவிலிருந்து லட்சக்கணக்கான டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என Sydney Morning Herald தெரிவித்துள்ளது.

ஆனால் பிரித்தானியாவில் எந்தவொரு சர்ச்சையை ஏற்படாமல் தவிர்க்க டோஸ் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்ற விவரம் ரகசியமாக வைக்கப்பட்டதாக Sydney Morning Herald தெரிவித்துள்ளது.

பிரித்தானியா அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி Sydney Morning Herald இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிப்பதை ஐரோப்பிய ஆணையம் ஏற்றுக்கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட முதல் 3,00,000 டோஸ் பிப்ரவரி 28 அன்று சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஆணையம் 2,50,000 டோஸ் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப அஸ்ட்ராஜெனெகா அளித்த விண்ணப்பத்தை முறையாகத் தடுத்த பின்னர், மார்ச் மாதத்தில் எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் லட்சக்கணக்கான டோஸ் வந்து சேர்ந்தது என Morning Herald இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்