இரகசிய டயரியால் வெளியான உண்மை: காதலியை அடித்தே கொலை செய்த காதலன்!

Report Print Nivetha in அமெரிக்கா
இரகசிய டயரியால் வெளியான உண்மை: காதலியை அடித்தே கொலை செய்த காதலன்!

அமெரிக்காவில் காதலியை அடித்தே கொன்ற காதலன் தொடர்பாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

Anne Kasprzak மற்றும் அவருடைய காதலன் Darwin Bagshaw இருவரும் தங்களது பள்ளிக் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர், தன் காதலி தன்னுடைய குழந்தையை கருவில் சுமந்துக் கொண்டிருப்பதை தெரிந்துக் கொண்ட காதலன் Bagshaw ,காதலியான Anne வை அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று அமெரிக்காவில் உள்ள Salt Lake City, Utah வில் இடம்பெற்றுள்ளது.

Salt Lake City, Utah வின் அருகில் உள்ள ரிவர்டன் நகரில் தன் தந்தை மற்றும் தாயுடன் Anne வாழ்ந்து வந்துள்ளார்.

Anne கணித பாடத்திற்காக பிரத்தியேக வகுப்பிற்கு செல்லும் போது 2012 ஆம் ஆண்டு Darwin-னுடன் காதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் Anne மார்ச் 10 ஆம் திகதி தன் வீட்டை விட்டு காணாமல் போயுள்ளார் என்று பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த நாள், ஜோர்தன் ஆற்றங்கரைக்கு அண்மையில் உள்ள பாலம் ஒன்றின் மேல் இரத்தக் கரைகளுடன் கூடிய காலணி ஒன்றை நபர் ஒருவர் இனங்கண்டுள்ளார், குறித்த நபர் உடனடியாக இந்த விடயத்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கரை ஒதுங்கியிருந்த அந்த சடலம் Anne உடையது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தான் தந்தையாக போவதாக Anne என்னிடம் கூறினாள், ஆயினும் என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, எனவே தான் அவளை கொலை செய்து விடலாம் என முடிவு செய்தேன் என புலனாய்வாளர்களிடம் Darwin தெரிவித்துள்ளார்.

Anneவின் உடலை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவள் கர்ப்பமாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

அப்படியாயின் டார்வினிடம் அவள் பொய் கூறினாலோ என சந்தேகம் எழுப்பியுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு Darwin பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்து பின்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

Anne குடும்பத்திற்கும் தன் குடும்பத்திற்கும் மற்றும் அனைவருக்கும் நீதிமன்றத்தின் முன்னிலையில் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நீதிமன்றம் Darwin-ற்கு 15 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும், Anne தன் காதலான Darwin பற்றிய விடயங்களை இரகசியமாக டயரி ஒன்றும் எழுதிவந்துள்ளார். இதன் மூலம் பல உண்மை விடயங்கள் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments