உணவகத்தில் பணியாற்றும் ஒபாமாவின் மகள்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள் உணவகம் ஒன்றில் பணிபுரியும் புகைப்படம் அந்நாட்டு ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் சாஷா (15). இவர், Martha's Vineyard - இல் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் பணியில் சேர்ந்துள்ளார்.

அதாவது, கோடை காலத்தினை முன்னிட்டு இவர் இந்த பணியினை தெரிவு செய்துள்ளார். மீன் வகை உணவுகளை விற்பனை செய்யும் அந்த உணவகத்தில், வாடிக்கையாளர்கள் சாப்பிட விரும்பும் உணவுகளை தெரிந்துகொண்டு அதனை எடுத்துக்கொண்டு வந்து பரிமாறுவது மற்றும் உணவுகளை பார்ஷல் செய்து கொடுக்கும் பிரிவு ஆகிய இரண்டு பணிகளை இவர் செய்து வருகிறார்.

அந்த உணவகத்தின் சீருடையான நீல நிற ஆடை மற்றும் தலையில் தொப்பி அணிந்து கொண்டு இவர் உணவகத்தில் பணியாற்றும் புகைப்படம் மற்றும் பணியினை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இதுகுறித்து வெள்ளை மாளிகை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments