அடாது மழை...விடாது வெள்ளம்: தவிக்கும் அமெரிக்க மக்கள்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் Louisiana மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால், அம்மாநில மக்கள் வீடுகளை இழந்து பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இதுபோன்ற கனமழை 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் என்றும் இதனால் பேரிழப்புகள் ஏற்படும் எனவும் தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.

கடும் மழையின் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் 2,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்தி. இதில் 1,000 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்

வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்கும் கனமாக பெட்டிகள் கூட அடித்துசெல்லப்பட்டு சாலைகளில் மிதக்கின்றன, இதனால் போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இம்மாநிலத்தில் உள்ள Livingston Parish பகுதியில் மெல்ல சூரியன் எட்டிப்பார்த்துள்ளது. இதனால் சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளம், பல்வேறு தெருக்களுக்கு வடிந்து சென்றுவிட்டதால், இங்கு மீட்பு பணிகள் சுலபமாக நடைபெற்று வருகிறது.

மேலும், மீட்பு பணிகளில் 1,7000 காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments