நண்பர்கள் அவமதித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த 13 வயது மாணவன்

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க நாட்டில் பள்ளியில் நண்பர்கள் ஏற்படுத்திய அவமானம் மற்றும் சித்தரவதைகளை தாங்க முடியாத 13 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் நகரில் உள்ள Holy Angels Catholic Academy என்ற பள்ளியில் Daniel Fitzpatrick என்ற 13 வயது மாணவன் 6-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னால் சக நண்பன் மற்றும் முன்னாள் நண்பர் ஆகியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையை தீர்க்க டேனியல் முயற்சி செய்துள்ளான். ஆனால், டேனியல் தலையிட்டதால் மற்றொரு மாணவனுக்கு ஆசிரியர்களால் தண்டனை கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சக மாணவர்கள் டேனியலை தொடர்ந்து அவமதித்து மற்றும் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத டேனியல் கடந்த வியாழக்கிழமை அன்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.

இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த டேனியலின் தந்தை ஒரு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எனது மகனின் இறப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு விவகாரம் பள்ளியில் எழுந்தபோது அதனை தீர்க்க ஆசிரியர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.

சக மாணவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற ஒரு சூழலை எதிர்க்காலத்தில் தங்களுடைய பிள்ளைகளுக்கு உருவாக்கி தரவேண்டாம்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments