ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்கா தான்! பரபரப்பு தகவல்

Report Print Basu in அமெரிக்கா

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தோன்றக் காரணம் அமெரிக்காதான் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா இந்தக் கருத்தை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

இஸ்லாமிய தேச இயக்கம் உருவாகக் காரணம் அமெரிக்கா என்று அந்த நாட்டு அதிபர் தேர்தல் வேட்பாளரே கூறியிருக்கிறார் என்றும், அவர் தக்க ஆவண ஆதாரங்களோடுதான் அதைத் தெரிவித்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் பலத்தை குறைப்பதற்காக, புதிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுவை அமெரிக்கா உருவாக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை நிறுவியவர் ஒபாமா என்றும், ஹிலாரி கிளிண்டன் அதன் துணை நிறுவனர் என்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகள் தொடர்பாக அமெரிக்கா பின்பற்றிய தவறான வெளியுறவுக் கொள்கைகளால் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தோன்றியது என்று டிரம்ப் கூறினார். இதனைத்தொடர்ந்து, அவரது கருத்து பரவலான கண்டனத்தைப் பெற்றது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்து சரிதான் என்று ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments