பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்பது கழிவறை நீரை குடிப்பதற்கு சமம்!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

குடிநீர் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான அம்சம். அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் உள் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கக்கூடியதுடன் உடல் எடையை குறைக்கக் கூடியது.

எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீரை ஓரிடத்தில் இருந்து கொண்டு சென்று குடிப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களையும் நாம் பயன்படுத்துகிறோம்.

அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய சமீபத்திய ஆய்வுகளில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் கொண்டு செல்வது மிகவும் பாதுகாப்பற்றது, அசுத்தமானது என்று தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துபவர்கள் அதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் தண்ணீர் குடிக்கும் பலவகைப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் தண்ணீர் போத்தல்களை குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை கழுவுவதும், அதனால் போத்தல்களில் ஏராளமான பாக்டீரியாக்கள் உருவாகி குடிகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இத்தகைய பிளாஸ்டிக் போத்தல்களில் கழிவறை தண்ணீருக்கு இணையான பாக்டீரியாக்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

கூழானாலும் குளித்துக் குடி என்று அவ்வை சொன்னதை நினைவுகூறும் வேளையில், தண்ணீர் போத்தல்களை சுத்தப்படுத்துவதையும் கடமையாக் கொள்ள வேண்சியது அவசியமாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments